ஹைக்கூ போட்டி எண் 119ன் ஹைக்கூ வெற்றியாளர்கள் கவிதைகள்
1. குழந்தையின் முகம்
சுருங்கி விட்டது
காற்றில்லா பலூன்
மு.நாகராஜன்
2. பொம்மை முகம்
சிரிப்பு மாறாமல் இருக்கிறது
வாங்கிக் கொண்ட குழந்தை
'கண்மணி'-கண்ணன்
3. விதவிதமான பொம்மைகள்
அழகாக இருக்கிறது
வானில் வானவேடிக்கைகள்
ச.லதாதேவி
4. விதவிதமான பொம்மைகள்
அழகாக இருக்கிறது
மழலையின் புன்னகை
'கனல்கவி' சென்னிமலை அ.சீனிவாசன்
5. விளையாட்டு பொம்மைகள்
பலவேறு வண்ணங்களில் உள்ளது
கூடையில் பாலூன்கள
ஜெக.சுகமணியன்
6. திருவிழா கூட்டம் பார்க்க முடிகிறது
பாரம்பரியம் மாறாத
கைவினைப் பொருட்கள்
ச. இராஜ்குமார்
7. வண்ண பொம்மைகள்
வசீகரமாக இருக்கின்றன
பூக்கடையில் மாலைகள்
வ பரிமளாதேவி
8. கூடையில் ஊதுபைகள்
நெருக்கமாக உள்ளன
திருவிழாவில் கடைகள்
கு.கதிரேசன்
9. முகமூடி அணிந்து
விற்பனை
மறையாமல் பசி
பாண்டியராஜ்
10. முகமூடிகள்
உண்மையை மறைத்து விடுகின்றன
கட்சிசார் ஊடகங்கள்
சோ. ஸ்ரீதரன்
11. பொம்மை வியாபாரம்
வேகமாக நடக்கிறது
சாவிமுடுக்கிய பொம்மை
கோவை ஆறுமுகம்
12. பலவிதமான பொம்மை
அழகாக காட்சி அளிக்கிறது
அம்மன் அலங்காரம்
கே.பி.துரைசாமி
13. பொம்மை விற்பனை
களை கட்டுகிறது
திருவிழாக் கூட்டம்
கலாராணி லோகநாதன்
14. பொம்மை முகமூடிகள்
உண்மையான முகங்களை மறைக்கின்றன
அதீத ஒப்பனைகள்
ம.பழனிச்சாமி
15. திருவிழா கூட்டம்
அதிகரித்துக் கொண்டே வருகின்றது
விளையாட்டுப் பொருள்கள்
ஆ.முருகேசுவரி
16. சுருங்கிய பலூன்கள்
பிள்ளைகளை ஈர்க்கவில்லை
நெகிழி பொம்மைகள்
அருண்மொழி
17. பொம்மைகள் விற்பனை
குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கின்றது
கார்ட்டூன் கதைகள்
சங்கர்குரு பழனிச்சாமி
நடுவர் : கரு.கிருஷ்ணமூர்த்தி
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Post a Comment